சான் சுன் சிங்: பொருளியல் வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தி உற்பத்தித்துறை

வருங்காலத்தில் தயாரிப்புத் துறை பல்வேறு இடையூறுகளைச் சந்தித் தாலும் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்கு அது முக்கிய உந்து சக்தியாக தொடர்ந்து திகழும் என்று வர்த்தக, தொழில் அமைச் சர் சான் சுன் சிங் வலியுறுத்தி யுள்ளார். தொழிற்துறை மாறி வருவதால் உற்பத்தித் துறையின் தோற்றம் மாறிவருகிறது. இதனால் குறைவான பொருட்கள் தயாரிக்கப் படும். அதே சமயத்தில் உயர்தர மான பொருட்களை உற்பத்தி செய்ய அதிக திறன்கள் தேவைப் படும் என்றார் அவர்.

சிங்கப்பூரின் ஒட்டுமொத்த பொருளியலில் உற்பத்தித் துறை மட்டும் ஐந்தில் ஒரு பங்கை வகிக் கிறது. வருங்காலத்தில் உற்பத்தித் துறைக்கான சந்தை மந்தமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. இருப்பினும் ஆய்வு, மறுஉருவாக்கத்துடன் அது தன்னை இணைத்துக் கொண்டால் உற்பத்தித் துறை தொடர்ந்து விரி வடைய வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

பிளாஸ்டிக் வார்ப்பு நவீன தொழிற்சாலை பற்றி அமைச்சர் சான் சுன் சிங்குக்கு (வலமிருந்து 2வது) விளக்கப்படுகிறது.