சாலையில் ஓடிய காட்டுப் பன்றி லாரி மோதி உயிரிழந்தது

பொங்கோலில் நேற்று நிகழ்ந்த விபத்தில் காட்டுப் பன்றி ஒன்று உயிரிழந்தது. வாட்டர்வே பாய்ண்ட் கடைத்தொகுதிக்கு வெளியே முற்பகல் 11.55 மணியளவில் நிகழ்ந்த லாரி விபத்தில் அது மாண்டதாக விலங்குநல ஆய்வு நிறுவனமான ஏக்கர்ஸ் தெரிவித்துள்ளது. கார் நிறுத்தப் பகுதி ஒன்றிலிருந்து சாலையை நோக்கி ஓடியபோது காட்டுப் பன்றி மீது லாரி மோதியதாக நம்பப்படுகிறது. சம்பவ இடத்திலேயே அது உயிரிழந்தது.