மூதாட்டியிடமிருந்து $5 மில்லியன் கையாடிய இளைஞர் கைது

ஓய்வுபெற்ற மூதாட்டியிடமிருந்து $5 மில்லியனுக்கு மேல் ஏமாற்றிய குற்றத்தை நீதிமன்றத்தில் நேற்று 21 வயது லூய் யு சொங் ஒப்புக்கொண்டார். 
அனைத்துலக ரீதியில் இயங்கும் ஒரு மோசடிக் கும்பல் சார்பில் இவ்வாறு பணத்தைக் கையாடியதாக லூய் கூறினார். 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் போலிஸ் அதிகாரியாக ஆள் மாறாட்டம் செய்து பணத்தைக் கையாடிய குற்றத்தில் மூதாட்டி சம்பந்தப்பட்டிருப்பதாக அவரை நம்ப வைத்தனர். 
குற்றம் சாட்டப்படாமல் தப்பிக்க மூதாட்டி தம் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வெவ்வேறு நபர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவும் இடப்பட்டது.  
மூதாட்டியிடமிருந்து $1 மில்லியனுக்கு மேல் லூய் ஏமாற்றிப் பெற்றுக்கொண்டதாகவும் மீதமுள்ள தொகையைக் கும்பலுடன் தொடர்புடைய மற்றவர்கள் எடுத்துக்கொண்ட தாகவும் கூறப்பட்டது. இது தொடர்பில் இன்று லூய்க்குத் தண்டனை விதிக்கப்படும்.