மின் சிகரெட் ஆபத்துகளை விளக்க இயக்கம்

மின் சிகரெட்டுகளின் பாதிப்பு களைப் பொதுமக்களுக்கு எடுத் துக் கூறுவதற்காக சுகாதார மேம் பாட்டு வாரியம் ஓர் இயக்கத்தைத் தொடங்குகிறது. கவர்ச்சியாகவும் ஈர்ப்பு சக்தி யுடனும் இருக்கும் மின் சிகரெட்டு களில் பொதிந்துள்ள ஆபத்தான ரசாயனப் பொருட்கள் பற்றி அந்த இயக்கத்தில் மக்களுக்கு விளக் கப்படும். கார்கள் பயன்படுத்தும் எரி பொருளில் காணப்படும் பென் சைன் என்ற புற்றுநோயை ஏற்படுத் தக்கூடிய ரசாயனப் பொருள் மின் சிகரெட்டில் இருக்கிறது. நிக்கோட் டினும் அதில் இருக்கிறது. மின் சிகரெட்டுகள் பயன் படுத்துவதற்குப் பாதுகாப்பானவை அல்ல என்பதை இளையருக்கும் பெற்றோருக்கும் எடுத்துக்கூறி போதிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம்.

பூகிஸ் பிளஸ் கடைத் தொகுதியில் நேற்று நடந்த சாலைக்காட்சியில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. சமூக ஊடகம், Kiss92 என்ற வானொலி நிலையம், மத்திய சிங்கப்பூரில் நடக்கும் சாலைக் காட்சிகள், குறிப்பிட்ட உயர்கல்வி நிலையங்களில் இப்போது முதல் வரும் மார்ச் மாதம் வரையில் இந்த இயக்கம் நடக்கும். சுகாதார, உள்துறை அமைச்சு களுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் நேற்று இந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். மின் சிகரெட்டுகளைப் புழங்கு வோர் பிறகு புகைக்கும் பழக்கத் திற்கு அடிமையாகிவிடும் வாய்ப்பு அதிகம் என்று அப்போது அவர் எச்சரித்தார். சிகரெட்டுகளுடன் ஒப்பிடும் போது மின் சிகரெட்டுகள் ஆபத்து குறைந்தவை. புகைக்கும் பழக்கத் தைக் கைவிட மின் சிகரெட்டுகள் உதவும் என்றெல்லாம் கூறப்படுவது தவறான தகவல்கள் என்று திரு அம்ரின் குறிப்பிட்டார்.