விவியன்: உலக இடையூறுகளை வென்று சாதிக்க 3 வழிகள்

சீர்குலையும் உலக ஒழுங்கையும் அதிகரிக்கும் மின்னியல் இடையூறுகளையும் தாண்டிச் செல்லக்கூடிய பொருத்தமான வழியை சிங்கப்பூர் தொடருவது அவசியம் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையிலான வெளிநாட்டு கொள்கை கோட்பாடு 1965 முதல் சிறப்பான ஒன்றாக நீடித்து வருவதாகவும் அவர் குறிப் பிட்டார். 
கொள்கை ஆய்வுக் கழகம் எற்பாடு செய்த ‘சிங்கப்பூர் கண்ணோட்டம் 2019’ மாநாட்டில் உரை நிகழ்த்திய அவர், சிங்கப்பூர் சாதிக்க மூன்று வழிகளை மேற் கோள் காட்டினார்.