தளவாடப் போக்குவரத்துத்துறை ஊழியர் தேர்ச்சி மேம்பட புதிய முயற்சிகள்

தளவாடப் போக்குவரத்துத் தொழில்துறையில் உள்ள ஊழியர் களின் தேர்ச்சிகளை மேம்படுத்துவதன் மூலம் அந்தத் தொழில் துறைக்கு ஊக்கமளிக்கும் முயற்சி கள் இடம்பெறுவதாக வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர்  டாக்டர் கோ போ கூன் தெரிவித் துள்ளார்.
தளவாடப் போக்குவரத்துத் தொழில்துறை நம்முடைய பொரு ளியலின் முதுகெலும்பாகத் திகழ்கிறது என்றும் நம் வாழ்க்கைத் தரம் மேம்பட அந்தத் துறை உதவு கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். 
பொருட்கள் அவை உருவாக் கப்படும் இடங்களிலிருந்தும் விநி யோக இடங்களிலிருந்தும் நிறு வனங்களுக்கும் குடும்பங்களுக் கும் வாடிக்கையாளர்களுக்கும் நம்பகமான முறையில் ஆற்றல்மிக்க வழிகளில் சென்று சேரவேண்டியது முக்கியமான ஒன்று என்றாரவர். 
முப்பரிமாண அச்சுத் தொழில், மின்னிலக்கமயம், கணினித் தகவல் துறை போன்ற புதிய தொழில்நுட்பப் பாணிகளும் நிறு வனங்களும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை ஏற்படுத்துவதாகவும் டாக்டர் கோ கூறினார். 
இந்த வாய்ப்புகளைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டிய தேவை நிறுவனங்களுக்கு இருப்ப தாகத் தெரிவித்த மூத்த துணை அமைச்சர், இவற்றின் விளைவாக வேலைகள் மேம்படும் என்றும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.