நன்னடத்தைக் கண்காணிப்பில்  பதின்ம வயது பையன்  

மாணவன் ஒருவன் தான் படித்த உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 13 வயதுப் பையனை மானபங்கப் படுத்தினான்.      10 வயது சிறுவனை அணுகி நிர்வாணப் படங்களை அனுப்பிவைக்கும்படி அந்தச் சிறுவனை நச்சரித்தான். 
இப்போது அந்த மாணவனுக்கு வயது 18. இந்தக் குற்றங்களுக்காக அந்தப் பதின்ம வயதுப் பையன், 27 மாத நன்னடத்தைக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டான். 
190 மணி நேரம் சமூகச் சேவை ஆற்றவேண்டும் என்றும் அவனுக்கு உத்தரவிடப்பட்டது. 
அந்தப் பதின்ம வயதுப் பையன் மனோவியல் கண் காணிப்புக்கு உட்படவேண்டும். அவன் நன்னடத்தையுடன் நடந்துகொள்வதை அந்தப் பையனின் தாயார் உறுதிப்படுத்த வேண்டும். 
இதில் அந்த இளைஞன் தவறினால் அந்தத் தாயார் செலுத்தி இருக்கும் $5,000 பறிமுதல் செய்யப்படும்.   அந்தப் பதின்ம வயதுப் பையன் சென்ற டிசம்பரில் இரு குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டான். அவன் பெயரை வெளியிட இயலாது.