தீவின் கிழக்குப் பகுதியில் புகை நாற்றம்

சிங்கப்பூரில் தெம்பனிஸ், பிடோக், பாசிர் ரிஸ் உள்ளிட்ட கிழக்கு வட்டாரங்களில் நேற்று ஏற்பட்ட புகை நாற்றத்திற்கு புகைமூட்டமோ எரிதல் தொடர் பான சம்பவங்களோ காரணமல்ல என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
 இந்த வட்டாரங்களில் புகை மூட்டம் ஏற்பட்டிருக்கலாம் என அந்த வட்டாரவாசிகள் கருதினர்.
தெம்பனிசில் பொதுமக்கள் சிலர் முகமூடிகளை அணிந்த வாறு காணப்பட்டனர். அத்துடன், தூரத்தில் காணப்படும் கட்டடங் கள் பலருக்குத் தெளிவாகத் தென்படவில்லை. தொழிற்சாலை களில் எரிதல் தொடர்பான சம் பவங்கள் ஏதும் நிகழந்ததாகத் தெரியவில்லை என்று வாரியம் விசாரணை மேற்கொண்டபின் உறுதிப்படுத்தியது.  
சிங்கப்பூரின் கிழக்குப் பகுதி யில் நேற்று இரவு 8 மணிக்கு ‘பிஎஸ்ஐ’ காற்றுத்தரக் குறியீட் டில் 65 புள்ளிகள் பதிவாகி உள்ளது. 
இது, 51 புள்ளிகளுக்கும் 100 புள்ளிகளுக்கும் இடையிலான மிதமான அளவு. வாரியம் காற் றுத் தூய்மைக்கேட்டைக் கண் காணித்து வருகிறது. 
 

Loading...
Load next