பராமரிப்பாளர் ஆதரவு செயல்திட்டம் அறிமுகம்

வயதானவர்கள், உடல், மனரீதியாகத் தளர்ந்துபோனவர்கள், உடற்குறையுள் ளோர் ஆகியோரைப் பராமரித்து வரும் சிங்கப்பூரர்கள் அடுத்த ஈராண்டுகளில் கூடுதல் உதவிகளை எதிர்பார்க்கலாம்.
பராமரிப்புச் செலவைக் குறைக்க உதவ புதிய மானியம், பராமரிப்பாளர்கள் இடைஓய்வுக்காக அதிக தெரிவுகள், உடன்பிறந்தோரின் பராமரிப்புச் செலவு களுக்கு உதவுவதற்காக மெடிசேவ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுதல் போன்றவையும் அவற்றுள் அடங்கும்.
தங்களுக்குத் தேவையான சேவை களைப் பெற மக்கள் எளிதில் அணுக முடியும் விதமாக அதிகமான பரா மரிப்பாளர் ஆதரவுக் கட்டமைப்புகளைச் சுகாதார அமைச்சு ஏற்படுத்தும்.
இந்த மாற்றங்கள் அனைத்தும் புதிய பராமரிப்பாளர் ஆதரவுச் செயல் திட்டத்தின் ஓர் அங்கம். இந்த விவரங்களைச் சுகாதார மூத்த துணை அமைச்சர் எட்வின் டோங் நாடாளு மன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
இந்தச் செயல்திட்டத்தின்கீழ், பரா மரிப்பாளர்களின் சுமையைக் குறைக்க உதவும் வகையில் ஆறு புதிய நட வடிக்கைகள் அறிமுகம் காணும். அவற்றுள் ஒன்று, இல்லப் பராமரிப்பு மானியம். இந்தத் திட்டம் இவ்வாண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும்.
இப்போதுள்ள $120 வெளிநாட்டுப் பணிப்பெண் மானியத்திற்குப் பதிலாக இந்தப் புதிய $200 மானியம் அறிமுகப் படுத்தப்படும். நிரந்தர மிதமான உடற் குறையுள்ள அனைத்து வயதினரும் இந்த மானியத்திற்குத் தகுதிபெறுவர்.