கார்ல்டன் ஹோட்டலுக்கு அருகே வெடிப்புச் சத்தம்

பிராஸ் பாசா ரோட்டிலுள்ள கார்ல்ட்டன் ஹோட்டல் கட்டடத்திற்குப் பின்புறத்திலிருந்து புகை வந்ததை அங்கு சுற்றியிருந்தவர்கள் கண்டதாகத் தெரிகிறது. ஹோட்டலுக்கு அருகே வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

கார்ல்ட்டன் ஹோட்டலிலிருந்து சுமார் 1,000 பேர் வெளியேற்றப்பட்டதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாள் தெரிவித்தது.

76 பிராஸ் பசார் ரோட்டில் உள்ள இந்த ஹோட்டலில் நடந்த சம்பவம் குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் தீயணைப்பு வாகனங்களும் போலிசாரும் இருந்ததாகச் சமூக ஊடகங்களில் வலம் வரும் படங்கள் காட்டுகின்றன.

Loading...
Load next