நிறுவன உற்பத்தித்திறன் உயர ‘பட்ஜெட்’ உதவும்

சிங்கப்பூரில் நிறுவனங்கள் உற்பத்தித் திறனை எவ்வாறு பெருக்க முடியும், போட்டித்திறனுடன் எவ்வாறு திகழ முடியும் என்பதில் புதிய வரவு செலவுத் திட்டம் ஒருமித்த கவனம் செலுத்தும் என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்து இருக்கிறார்.

வேலை இடங்களில் ஆற்றல் களைப் பெருக்குவது, நிறுவனங் கள் தொழில்நுட்பங்களைத் தழுவிக் கொள்ளுமாறு செய்வது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பெனோய் பகுதியில் இருக்கும் ஃபேர் பிரைஸ் நிறுவன விநியோக மையத்திற்குச் சென்றிருந்த அமைச்சர், அங்கு இந்தக் கருத்துகளைக் கூறினார். 

நிறுவனங்கள் ஊழியர்களுக் குப் பயிற்சி அளித்து அவர்களை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதைக் காணலாம் என்று தான் நம்புவதாக திரு ஹெங் குறிப்பிட்டார். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஜாலான் புரோவில் அண்மையில் நிகழ்ந்த மாபெரும் எரிவாயுத் தோம்பு தீச்சம்பவத்தை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் ஒருங்கிணைப்புத் தளபதிகளாகச் செயல்பட்ட கேப்டன் தினேஷ் வெள்ளைச்சாமி (இடது), மேஜர் நவின் பாலகிருஸ்னன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Jun 2019

சவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்