10ல் 8 சிறிய, நடுத்தர நிறுவனங்கள் வர்த்தகச் சலுகைகள் எதிர்பார்க்கின்றன 

சிங்கப்பூரில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களில் பத்தில் எட்டு வரும் பட்ஜெட் அறிக்கையில் தங்களுக்கு இன்னும் அதிகமான வர்த்தகச் சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றன என்று டிபிஎஸ் வங்கி நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
சிரமமான வர்த்தகச் சூழலில் சிறிய நடுத்தர நிறுவனங் களை மனிதவள விவகாரங்கள் 26.5%, உயர்வான நடை முறைச் செலவுகள் 21.5%, வளரும் வர்த்தக வருமானத்தின் சவால்கள் 21% என்ற அளவில் பாதிக்கும். மனிதவள சவால் களைப் பார்த்தால் சரியான ஊழியர்களை வேலைக்கு அமர்த்துதலில் 43%, ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள் ளுதலில் 27% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் அம்சத்தை எடுத்துக்கொண்டால், ஐந்து சிறிய நடுத்தர நிறுவனங்களில் நான்கு, தங்கள் ஊழியர்கள் இப்போது வேலைக்கு ஏற்ற திறனைப் பெற்றிருக் கிறார்கள் என்றன. 
அரசாங்கத்தின் ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ முயற்சிகளின் வழி பத்தில் ஒன்பது சிறிய நடுத்தர நிறுவனங்கள் இப்போது கட்டுப்படியான பயிற்சித் திட்டங்களில் தாங்கள் பங்கேற்க முடிகிறது என்று சொன்னதாக ஆய்வு கூறியது.