சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மின்னிலக்கப் பொருளியலில் இணைய வேண்டும் 

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மின்னிலக்கப் பொருளியலில் இணைவது முக்கியம் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் 
எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அப்படி செய்வதன் மூலம் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
வர்த்தகங்கள் மின்னிலக்கப் பொருளியலில் இணைய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து திரு ஈஸ்வரன் நேற்று பேசினார்.
“பெரிய நிறுவனங்கள் மட்டு மின்றி சிறிய, நடுத்தர நிறுவனங் களும் மின்னிலக்கப் பொருளி யலில் இணைய வேண்டும்,” என்று திரு ஈஸ்வரன் கூறினார்.
உற்பத்தித் திறனை உயர்த்த வர்த்தகங்கள் மின்னிலக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் கூறி வருகிறது.
சிங்கப்பூர் பொருளியலின் வளர்ச்சிக்கு சிறிய, நடுத்தர நிறுவனங்கள் முக்கிய பங்காற்று கின்றன. சிங்கப்பூரின் மொத்த வேலை வாய்ப்புகளில் 65 விழுக்காட்டை சிறிய, நடுத்தர நிறுவனங்கள் வழங்குவதாகப் புள்ளிவிவரத் துறை தெரிவித்தது. 
2017ஆம் ஆண்டு பொருளி யலில் சிறிய, நடுத்தர நிறுவனங் களின் பங்கு $196.8 பில்லியன்.
மொத்த வரவு $100 மில்லியனுக்கும் மேல் இல்லாத அல்லது 200க்கும் அதிகமான ஊழியர்கள் இல்லாத நிறுவனங் களைச் சிறிய, நடுத்தர நிறுவனங் களாகப் புள்ளிவிவரத் துறை அடையாளம் காண்கிறது.
அரசாங்கத்தின் மின்னிலக்கத் தயார்நிலைத் திட்டம் தனிநபர் களுக்காகவும் வர்த்தகங்களுக் காகவும் நடத்தப்படுவதாக திரு ஈஸ்வரன் தெரிவித்தார்.
மின்னிலக்கப் பொருளியலில் இணைவதன் மூலம் அரசாங் கத்தின் மின்னிலக்கச் சேவை மற்றும் இதர மின்னிலக்கச் சேவைகளால் பலன் பெறலாம் என்றார் அமைச்சர் ஈஸ்வரன்.