‘மனநிறைவு அளிக்கும் வரவுசெலவுத் திட்டம்’ 

 

பத்து வயதில் படிப்பை நிறுத்தி விட்டு 25வது வயதில் மணம் முடிக்கும் வரை பல்வேறு வேலை களைச் செய்து குடும்பத்திற்கு ஆதரவாக இருந்தார் இப்போது 59 வயதாகும் திருவாட்டி பொன்னுசாமி கலா. 2007ஆம் ஆண்டு அவரது திருமண உறவு முறிந்துபோக, தமது மூன்று பிள்ளைகளையும்  கடும் சிரமங் களுக்கிடையே அவர்  வளர்த்தார். 
கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்னர் தமக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவுக்குப் பெற்றுவந்த சிகிச்சையைப் பொருளியல் நெருக்கடி காரணமாகப் பாதி யிலேயே அவர் நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. 
இந்த நிலையில், நாடாளு மன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் இடம்பெற்ற ‘மெர் டேக்கா’ தலைமுறைத் தொகுப்புத் திட்டம் மிகுந்த மனநிறைவை அளிப்பதாகக் கூறிய திருவாட்டி கலா, முக்கியமாக மருத்துவ செலவைக் குறைக்கப் பெரிதும் உதவும் என்று நம்புகிறார். 
கடந்த 11 ஆண்டுகளாக துப்புரவாளராகப் பணிபுரியும் தமக்கு இந்தத் திட்டம் கவலை களைக் குறைத்து அன்றாட வாழ்க்கையை உறுதியோடு கடக்க உதவும் என்றார் அவர். 
வர்த்தகங்களுக்கு, குறிப்பாக சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மின்னிலக்க முறைகளை அரவ ணைக்க திட்டங்கள் இடம்பெற்று இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று என்று கூறினார் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக தொழில் சபையின் தலைவர் டாக்டர் டி சந்துரு. 
அதிகரித்துவரும் செலவினங் கள், மனிதவள பிரச்சினைகள், மெதுவடையும் உலகப் பொரு ளியல் என குறிப்பாக சிறிய நிறுவனங்கள் பல்வேறு சவால் களைச் சந்தித்துவரும் வேளை யில் இத்திட்டங்களால் உடனடி பலன்களை எதிர்பார்க்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று நடைபெற்ற தேசின தின அணிவகுப்பின் கூட்டு ஒத்திகை யின்போது, தேசிய தின அணிவகுப்பு 2019 அணிவகுப்பு மற்றும் சடங்குபூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டினண்ட் கர்னல் லோ வூன் லியாங் (நடுவில்), அணிவகுப்புத் தளபதி லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ, அணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் ஆகியோருடன் அணிவகுப்பு பங்கேற்பாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

16 Jun 2019

அணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி