சிவில் உரிமை ஆர்வலருக்கு அபராதம்

அனுமதி இல்லாமல் 2016ல் பொதுக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்ததற்காகவும் அந்த விவகாரம் தொடர்பில் போலிசிடம் தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் கையெழுத்திட மறுத்ததற்காகவும் நேற்று சிவில் உரிமைகள் ஆர்வலர் ஜொலோவன் வாமுக்கு $3,200 அபராதம் விதிக்கப்பட்டது. 
நீதிபதியின் முடிவுகளை எதிர்த்து வாம், 39, மேல் முறையீடு செய்வார் என்றும் இப்போது அவர் $8,000 பிணையில் இருக்கிறார் என்றும் அந்த வழக்கறிஞர் கூறினார். அனுமதி பெறாமல் 2016 நவம்பர் 26ஆம் தேதி ‘தி அகோரா’ என்ற உள்ளரங்கில் ‘சிவில் கீழ்படியாமை மற்றும் சமூக இயக்கங்கள்’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததன் பேரில் வாம் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டார்.