2018ஆம் ‘ஏ’ நிலை தேர்வு முடிவுகள்: 93.3 விழுக்காட்டினர் குறைந்தது மூன்று பாடங்களில் தேர்ச்சி

பொதுக்கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் ( ஜிசிஇ ‘ஏ’ நிலை) தேர்வை  கடந்தாண்டு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதம், 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆக அதிகமாக உள்ளது. 

கடந்தாண்டு, 13,042 பள்ளி மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். அவர்களில் 12,170 மாணவர்கள் (93.3 விழுக்காடு) குறைந்தது மூன்று ‘எச்2’ தேர்ச்சிகளையும் பொதுத்தாள் அல்லது அறிவுசார் ஆய்வியல் பாடத்தில் தேர்ச்சியையும் அடைந்ததாகக் கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வு மதிப்பீடு வாரியமும் தெரிவித்தன.இவ்வாண்டின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டின் 93.3 விழுக்காட்டைக் காட்டிலும் 0.3 விழுக்காடு அதிகம்.