தனியார் வாடகை கார் சேவை: பயணிகள் மனநிறைவு குறைந்தது

தனியார் வாடகை கார் நிறுவனங் கள் வழங்கும் சேவையில் பயணி களின் மனநிறைவு சென்ற ஆண்டு சற்றே குறைந்து காணப் பட்டதாகப் பொதுப் போக்குவரத்து மன்றம் ஏற்பாடு செய்திருந்த ஆய்வு ஒன்று கூறுகிறது.
‘ஓ-ரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும் போக்கு வரத்துச் சேவையின் பயணிகள் மனநிறைவு ஆய்வு’ என்று அழைக்கப்படும் இந்த ஆய்வின் மூலம் டாக்சி, தனியார் வாடகை வாகனச் சேவை குறித்த பயணி களின் எதிர்பார்ப்புகளை  கண்டறி வதை நோக்கமாகக் கொண்டது.
இதில், தனியார் வாடகை கார் சேவையில் பயணிகளின் சராசரி மனநிறைவு நிலை கடந்த ஆண்டில் 8.2லிருந்து 7.9 என்ற நிலைக்கு குறைந்துள்ளது தெரியவந்து உள்ளது.
இந்த ஆய்வில் காத்திருப்பு நேரம், வாடகை கார்களைப் பெறும் வசதி எளிதான ஒன்றா, வாடகை கார் ஓட்டுநர்களுக்குச் சாலைகள் பற்றி தெரிந்திருத்தல் போன்றவை பற்றி பயணிகளிடம் கேட்கப்பட்டது.
அத்துடன், பாதுகாப்பு அம்சம், வசதியான பயணம், ஓட்டுநர் வழங்கும் சேவை உட்பட்ட மற்ற அம்சங்கள் குறித்தும் பயணி களிடம் கருத்துக் கேட்கப்பட்டதில் அவர்களிடையே மனநிறைவு குறைந்து காணப்பட்டதாகக் கூறப் படுகிறது.
“டாக்சி சேவையில் காணப்படும் முன்னேற்றங்கள் தனியார் வாடகை வாகனங்கள் வழங்கும் போட்டித்தன்மைக்கு ஈடு கொடுக்கும் வகையில் டாக்சி நிறுவனங்கள் செயல்படுத்தியுள்ள திட்டங்களே, குறிப்பாக டாக்சி சேவையைப் பெறுவதில் அறிமுகப்படுத்துள்ள செயலிகள், காரணம்,” என்று மன்றத்தின் பேச்சாளர் விளக்கினார்.