உள்ளூர் ‘பராமுண்டி’ மீன் பண்ணை $2 மி. செலவில் விரிவாக்கம்

‘பராமுண்டி’ மீன் வகையை வளர்க்கும் உள்ளூர் மீன் பண்ணையான ‘பராமுண்டி ஏ‌ஷியா’ நிறுவனம் தனது செயல்முறையை புதிய $2 மில்லியன் மதிப்புள்ள மீன் வளர்ப்புப் பகுதியின் விரிவாக்கத்துடன் அதிகரித்துள்ளது.இந்த விரிவாக்கத்தால் தனது மீன் உற்பத்தி, ஆண்டுக்கு 1.8 மில்லியன் மீன்கள் என மும் மடங்கு உயர்த்தப்படும் என்று அந்தப்  பண்ணை எதிர்பார்க்கிறது. அந்த வகையில் இந்தப் பண் ணையின் மீன் உற்பத்தி ஆண் டுக்கு 6,000 டன்களுக்கு உய ரும். இது சிங்கப்பூரின் 120 மீன் பண்ணைகள் உற்பத்தி செய்யும் மீன்களின் ஒட்டுமொத்த அளவைக் காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் தெற்கில் உள்ள செமாக்காவ் தீவில் அமைந்துள்ள இந்த மீன் வளர்ப்புப் பண்ணை இப்போது 1,200 சதுர மீட்டர் கூடுதல் பரப்பளவைக் கொண்டிருக்கிறது. அத்துடன் அந்தப் பண்ணையில் எட்டு ராட்சத 50 கன மீட்டர் தொட்டிகளும் உள்ளன.

மீன் பண்ணையின் விரிவாக் கத்தை நேற்று திறந்துவைத்த சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மச கோஸ் ஸுல்கிஃப்லி, “சிறிய நாடான சிங்கப்பூர் தனது உண வுத் தேவையின் 90 விழுக்காட்டை இறக்குமதியைச் சார்ந்துள்ளது. 

“எதிர்பாராத வெளிப்புற அதிர்ச்சிகளாலும் நாடுகளின் மேம்பாடுகளினாலும் உணவு விநி யோகம் பாதிக்கப்படும் அபா யத்தை சிங்கப்பூர் எதிர்நோக்கலாம்,” என்றார்.