ஆயுதப் படைக்கு ‘எஃப்-35’ போர் விமானங்கள்

சிங்கப்பூர் ஆயுதப் படைகள் நான்கு ‘எஃப்-35’ போர் விமானங் களை அமெரிக்காவிடமிருந்து வாங்க உள்ளது. தேவை ஏற்பட் டால் மேலும் எட்டு விமானங்களை வாங்கும் திட்டமும் உள்ளதாக நேற்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கூறினார். 
இப்போர் விமானங்கள் குறித்துக் கோரிக்கைக் கடிதம் ஒன்றைத் தற்காப்பு அமைச்சு அமெரிக்காவுக்கு அளிக்கும்.
ஒரு போர் விமானத்தின் விலை $90 மில்லியன் முதல் 115 மில்லியன் அமெரிக்க டாலர் வரை இருக்கும். 
சிங்கப்பூரிடம் உள்ள போர் விமானங்கள் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் உள்ளவை. இதில் முதல் கட்டமாக நான்கு விமானங் கள் மாற்றப்படவுள்ளன. புதிய விமானங்களின் திறனையும் தகுதியையும் முழுமையாக மதிப் பிட்ட பின்னர் எண்ணிக்கையை அதிகரிக்கப்படும் என தற்காப்பு அமைச்சு ஜனவரி மாதம் கூறி இருந்தது. 

பல பயன் போர் கலன்கள் போன்ற அதிநவீன கப்பல்கள் ஆளில்லா ஆகாய, கடல் ‘டிரோன்களை’ 2030ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும்.
கடலோர உள்நாட்டு பாதுகாப்பு முயற்சிகளும் மேம்படுத்தப்படும். ஆளில்லா கலன்கள் ரோந்துக்கு அடுத்தாண்டு முதல் பயன்படுத்தப் படும்.
“மொத்தத்தில் 2030ஆம் ஆண்டுக்குப் பின் அமையவிருக் கும் அடுத்த தலைமுறை சிங்கப்பூர் ஆயுதப் படை ஆகாயம், நிலம், கடல் என அனைத்திலும் சிங்கப்பூரைத் தற்காக்கும் வகை யில் முழுமை அடையும்,” என்றார் திரு இங்