உள்துறை குழுவின் அறிவியல் தொழில்நுட்ப மையம்

உள்துறைக் குழு முக வைகளின் திறன்களை மேம்படுத்துவதற்கான ஆண்டுச் செலவினம் இந்த நிதியாண்டில் இரட் டிப்பாகிறது. 2015ல் $979 மில்லியனாக இருந்த அத் தொகை  இந்த ஆண்டு $1.9 பில்லியன் ஆகிறது. புதிய அறிவியல் தொழில் நுட்ப முகவையால் மேம் பாட்டுத் திட்டம் வழிநடத் தப்படும். புதிய முகவைக் கான தேவை குறித்து உள்துறை அமைச்சுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கிய இரண்டாவது உள்துறை அமைச்சர் ஜோசஃபின் டியோ, உள் துறை குழுவின் ஆற்றலை இருப்பிடங்களிலேயே பெருக்க இது உதவும் என்றார். இதுவரையில், எஸ்டி இன்ஜினியரிங், சிங்டெல் போன்ற மற்ற அரசாங்க முகவைகள், தொழில் பங்காளிகளுடன் அமைச்சு பங்காளித்துவங் களை மேற்கொண்டு வரு கிறது என்றார் அவர். புதிய முகவையை உரு வாக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக் கல் செய்யப்படும் என்ற  திருவாட்டி ஜோசஃபின் டியோ,  ஆண்டு இறுதிக் குள் முகவை அமைக்கப் படும் என்றார்.