புதிய ஈரறை ‘ஃபிளெக்சி’ வீடுகளுக்கு பதியும் ஒற்றையர் எண்ணிக்கை அதிகரிப்பு

சிங்கப்பூரில் கூடுதலான ஒற்றையர் களால் புதிய ஈரறை ‘ஃபிளெக்சி’ வீடுகளை முதல்முறையாக வாங்க முடிவதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) தெரிவித்துள்ளது.
ஒற்றையர்களுக்காக கூடுதல் வீடமைப்புத் தெரிவுகளை வழங்க அரசாங்கம் எடுத்துவரும் முயற்சி களின் ஒரு பகுதியாக, முதிர்ச்சி அடையாத பேட்டைகளில் புதிய ஈரறை ஃபிளெக்சி வீடுகளை 35 வயதுக்கு மேற்பட்டவர்களால் வாங்க முடிகிறது.
2013ஆம் ஆண்டு ஜூலையில் இடம்பெற்ற தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் (பிடிஓ) வீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து ஏறக் குறைய 14,500 ஒற்றையர்கள் புதிய ஈரறை ஃபிளெக்சி வீடு களுக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவர்களில் 6,200 பேர் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் வீட்டுச் சாவிகளைப் பெற்றுக் கொண்டனர்.
தகுதிபெறும் ஒற்றையர்கள் வீவக வீடுகளை முதன்முறையாக வாங்கும்போது $40,000 வரை மானியம் பெறலாம். அதில், கூடுதல் மத்திய சேம நிதி வீடமைப்பு மானியமாக $20,000 வரையும் சிறப்பு மத்திய சேம நிதி வீடமைப்பு மானியமாக $20,000 வரையும் பெறலாம்.
2013ஆம் ஆண்டு ஜூலை யிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் வரை ஏறக்குறைய 9,200 ஒற்றை யர்கள் இந்த மானியத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்