நூல் இரவல்  இரட்டிப்பாகிறது

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நூலகங்களில் 16 மின் புத்தகங்கள் உட்பட மொத்தம் 32 நூல்களை இரவல் பெறுவதுடன் ஒவ்வொரு நூலையும் 21 நாட்களுக்கு வைத்துக்கொள்ளலாம். இதனை தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் திருவாட்டி சிம் ஆன் நேற்று நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார். 
2017ஆம் ஆண்டு முதல் நூலகத்திலிருந்து இரவல் பெறப்பட்ட மின்-நூல்களின் எண்ணிக்கை இரு மடங்காகி இருப்பதாகக் கூறிய அவர் அதிகரித்து வரும் பயனீட்டாளர்களின் தேவைக் கேற்ப இந்த மாற்றங்கள் அறிவிக்கப்படுவதாகக் கூறினார். 
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50,000க்கும் மேலான பங்கேற்பாளர்களுக்கு 1,500 பயிற்சிப் பட்டறைகளை நடத்த வாரியம் நோக்கம் கொண் டுள்ளதாகவும் அவர் கூறினார்.