உயர்நிலை 1 மாணவிகளுக்கு இலவச கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி

கருப்பைவாய் புற்றுநோயிலிருந்து பெண்களைப் பாதுகாக்க அடுத்த மாதத்திலிருந்து உயர்நிலை 1 மாணவிகள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப் படும். 
தேசிய பள்ளி அடிப்படையிலான சுகாதாரத் திட்டத்தின் ஒரு பகுதி யாக மாணவிகளின் விருப்பத்திற் கேற்ப இது வழங்கப்படும்.
ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 200 பெண்களுக்கு இந்தப் புற்றுநோய் ஏற்படுவதாகவும் 70 பேர் இதனால் உயிரிழப்பதாகவும் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர வாசிகளான உயர்நிலை மாணவிகளுக்கு இந்தத் தடுப்பூசி கட்டங்கட்டமாக வழங்கப்படும். 
தனியார் கல்விக் கழகங்களில் பயிலும் இதே வயதுடைய மாணவி களுக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்.

இவ்வாண்டு அரசாங்கம் இதற்காக $10 மில்லியனை ஒதுக்கியுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து அது ஆண்டுக்கு $2.5 மில்லியனை ஒதுக்கும்.
புருணை, மலேசியா உட்பட 70க்கும் அதிகமான நாடுகள், அவற்றின் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் இந்தத் தடுப்பூசியை உள்ளடக்கியுள்ளன.
பெண்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டாலும் வழக்க மான ‘பெப் ஸ்மியர்’ மருத்துவப் பரிசோதனைகளுக்குச் செல்ல வேண்டும். பெண்களிடம் காணப்படும் அனைத்து விதமான ‘வைரஸ்’ கிருமிகளுக்கு எதிராக தடுப்பூசி பாதுகாப்பு வழங்க இயலாது என்பதால் இந்தப் பரிசோதனை அவசியம்.
அத்துடன், துல்லியமான கருப்பை வாய் புற்றுநோய் பரிசோத னையைத் தான் கடைப்பிடிக்க இருப்பதாகவும் அமைச்சு அறி வித்தது. இதனால் மூன்றாண்டு களுக்கு ஒருமுறை என்பதற்குப் பதிலாக ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பெண்கள் இந்தப் பரிசோதனைக்குச் செல்லலாம்.