பழைய வீடுகளின் மேம்பாட்டுத் திட்டம் 2020ஆம் ஆண்டில் தொடங்கும்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் பழைய வீடமைப்புப் பேட்டைகளின் இரண்டாம் கட்ட வீட்டு மேம்பாட் டுத் திட்டத்தை 2020ல் தொடங்க வுள்ளது.
இந்த வீட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் (எச்ஐபி) கீழ், 1987க்கும் 1997க்கும் இடையில் கட்டப்பட்ட 230,000 வீடுகள் வருகின்றன என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்ற நாடாளுமன்றத்தில் கூறினார்.
எனினும், எல்லா புளோக்கு களுக்கும் மேம்பாட்டுப் பணிகள் எப்போது செய்து முடிக்கப்படும் என்று கூறமுடியாது. நிதி நிலை மையைப் பொறுத்து மேம்பாடுகள் இடம்பெறும் என்ற அமைச்சர், தங்கள் வட்டாரத்தின் அடுக்கு மாடிகளை முன்மொழிய இந்த ஆண்டு இறுதியில் நகர மன்றங் கள் அழைக்கப்படும் எனக் கூறி னார்.

இந்த மேம்பாட்டின் கீழ் கழி வுக் குழாய்களை மாற்றுவது, கான்கீரிட் மாற்றம் போன்றவற் றுடன் கழிவறையைச் சீரமைப் பது போன்ற விருப்பத் தேர்வு மேம்பாடுகளும் இடம்பெறும்.
இந்த மேம்பாட்டுக்கு மொத் தம் $4 பில்லியனுக்கு அதிகமாக செலவாகும் என கணிக்கப் பட்டுள்ளது.
எனினும், 60 முதல் 70 ஆண்டு காலம் பழமையான வீடுகளுக்கான 2வது வீட்டு மேம்பாட்டுத் திட்டம் (எச்ஐபிII) 'வெர்ஸ்' திட்டம் போன்றவை குறித்த விவரங்களை அமைச்சர் தெரிவிக்கவில்லை.
தனியார் பேட்டை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட வுள்ள தனியார் குடியிருப்புப் பேட்டைகள் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தேர்வு செய்யப்படும் என்றும் அமைச்சர் மன்றத்தில் விவரித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!