இலவச கருப்பை வாய் புற்றுநோய் சோதனை 

அறிமுகத் திட்டம் ஒன்றின்கீழ் 30 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்ட வெளிநாட்டுப் பணிப் பெண்களுக்குக் கருப்பை வாய் புற்றுநோய் சோதனை இலவசமாக நடத்தப்படுகிறது.
இந்த மருத்துவப் பரிசோதனை தேசிய பல்கலைக்கழக மருத்து வமனையில் இருக்கும் தேசிய பல்கலைக்கழக புற்றுநோய் கழகம், கேகே மகளிர், சிறார் மருத்து வமனை ஆகிய மருத்துவ மனைகளில் நடத்தப்படுகிறது.
ஆஸ்திரேலியா, நெதர்லாந்து போன்ற நாடுகளில் நடத்தப்படும் பரிசோதனைகள் இங்கு நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சு கடந்த புதன்கிழமை அறிவித்தது.
தற்போதைய ‘பெப் ஸ்மியர்’ சோதனையைவிட இந்த மருத்துவப் பரிசோதனை மேலும் துல்லியமானது என்று தெரி விக்கப்பட்டது.
கருப்பை  வாய் புற்றுநோய்க் கான ஹெச்பிவி தடுப்பூசியை அடுத்த மாதத்திலிருந்து பள்ளி களில் இலசவமாகப் போட்டுக் கொள்ள உயர்நிலை 1 மாணவி களுக்குத் தெரிவு வழங்கப்படும்.