சுடச் சுடச் செய்திகள்

2018ல் தொழிலாளர் சந்தை பல வகையிலும் மேம்பட்டுள்ளது

சிங்கப்பூரின் தொழிலாளர் சந்தை சென்ற ஆண்டில் பல வகைகளிலும் மேம்பட்டது. 2011க்குப் பிறகு சென்ற ஆண்டில் ஆட்குறைப்பு ஆகக் குறைந்த அளவை எட்டி யது. மொத்த வேலை வாய்ப்புகள் 2014க்குப் பிறகு சென்ற ஆண்டில் ஆக அதிகமாக இருந்தன.
புதிதாக 38,300 பேருக்கு வேலைகள் கிடைத்தன. இந்த நிலவரம் 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தலைகீழ் மாற்ற மாக இருக்கிறது. 2017ல் தொழி லாளர் சந்தை சுருங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 
சென்ற ஆண்டில் வேலை பார்த்த சிங்கப்பூரர்கள், நிரந்தர வாசிகள் அதிகம். வருடாந்திர சராசரி வேலையின்மை விகிதமும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் தொடர்பான நீண்டகால வேலை யின்மை விகிதமும் சென்ற ஆண்டு கொஞ்சம் குறைந்தன. 
இருந்தாலும் இந்த மேம்பட்ட நிலவரத்துக்குச் சென்ற ஆண்டு முதல் ஒன்பது மாதங்களில் காணப்பட்ட நல்ல செயல்திறனே காரணம் என்று மனிதவள அமைச் சின் ஆகப் புதிய புள்ளி விவரங் கள் தெரிவிக்கின்றன. 
2018 கடைசிக் காலாண்டில் மொத்த வேலை வாய்ப்பு வளர்ச்சி வேகம் குறைந்தது. சென்ற ஆண்டு முழுவதிலும் மொத்தம் 10,730 ஊழியர்கள் ஆட்குறைப் புக்கு ஆளானார்கள். இந்த எண் ணிக்கை 2017ல் 14,720 ஆக இருந்தது.2019-03-15 06:00:00 +0800

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon