குறும்புச்செயல் பற்றிய விசாரணையில் உதவ பெண் ஒருவர் தேடப்படுகிறார்

தெலுக் குராவ், லோரோங் ‘ஜி’யில், நேற்று தீ வைத்து குறும்புச் செயல் புரிந்தது தொடர்பில் போலிசாரின் விசாரணைக்கு உதவ பெண் ஒருவர் (படத்தில் இருப்பவர்) தேடப்படுகிறார்.
அவர் கடைசியாக இளஞ்சிவப்பு நிறத்திலான மேலாடையும் கரும் நிறத்தி லான குட்டை பாவாடையும் அணிந்திருந்தார்.
இவரைப் பற்றிய தகவல் அறிந்தவர்கள் 1800-2550000 எனும் போலிசின் நேரடி தொலைபேசி எண்ணில் அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/iwitness எனும் இணையப் பக்கத்தில் தகவல் தெரிவிக்கலாம். அனைத்து விவரங்களும் மிக ரகசியமாக வைத்திருக்கப்படும்.