தீவு விரைவுச்சாலையில் புதிய தடம்

சாங்கி விமான நிலையத்தின் ‘ஜுவல்’ திறக்கப்படுவதை முன்னிட்டு விமான நிலைய பொலிவார்ட்டை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் புதிய தடம் சேர்க்கப்பட்டுள் ளது. வெளிச்சாலையின் விரிவாக்கம், தீவு விரைவுச் சாலையில் மூன்றாவது தடத்தை உருவாக்கியிருப்பதுடன் வெளியேறும் பாதை 1யும் விமான நிலையத்திலிருந்து சற்று தூரமான இடத்துக்கு மாற்றியுள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்து சுமுகமாக இருக்க வழி செய்யப்பட்டுள்ளது. புதிய தடத்தை மார்ச் 24ஆம் தேதி முதல் பயணிகள் பயன்படுத்தலாம்.