தானியங்கி சாலை சுத்திகரிப்பு வாகனங்கள் திட்டம்

சாலைகளைச் சுத்தம் செய்யும் ஓட்டுநரில்லா வாகனங்களுக்கான வடிவமைப்பு, மேம்பாடு, சோதனைத் திட்டம் ஆகியவற்றை சிங்கப்பூரைச் சேர்ந்த இரண்டு சங்கங்கள் மேற் கொள்ள இருக்கின்றன. 
சாலைகளைச் சுத்தம் செய்யும் ஓட்டுநரில்லா வாகனத்துக்கான ஆய்வு  மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை நடத்தும் வாய்ப்பை தேசிய சுற்றுப்புற வாரியம், போக்கு வரத்து அமைச்சு ஆகிய வற்றிடமிருந்து இந்த இரண்டு சங்கங்களும் பெற்றுள்ளன.
முதல் சங்கத்தில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், என்வே, வியோலியா இஈஸ் சிங்கப்பூர் இன்டஸ்ட்ரியல், வோங் ஃபோங் இஞ்சினியரிங் வொர்க்ஸ் ஆகியவை உள்ளன.