மேம்பாலக் கட்டுமானம்: தெம்பனீஸில் சாலை மூடல்

தெம்பனீஸ் அவென்யூ 6 மற்றும் தெம்பனீஸ் அவென்யூ 11ன் ஒருபகுதி அடுத்த வெள்ளிக்கிழமை (மார்ச் 29) மூடப்படும். மேம்பாலம் ஒன்றின் கட்டுமானப் பணிகளுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னிரவு 1 மணி முதல் காலை 5 மணி வரை அங்கு போக்குவரத்து நிறுத்தப்படும்.

மேம்பாலம் இவ்வாண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.