சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற இருவர் கைது

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழையும் நோக்கில் இருவரை ஏற்றிக்கொண்டு மோட்டார் படகு ஒன்று பொங்கோலுக்கு அருகில் வேகமாகச் வந்தது. கரைக்கு அருகில் படகு வந்ததும் அதிலிருந்த 20 வயது பங்ளாதே‌ஷி ஆடவர் தண்ணீருக்குள் குதித்து நிலத்தை நோக்கி நீந்தத் தொடங் கினார். மலேசிய படகோட்டி படகை மலேசியாவுக்கு ஓட்டிச் சென்றார். 
அந்தப் படகை கரையோரக் காவல் படையின் கப்பல் இடைமறித்து நிறுத்தியது. படகை நிறுத்த மறுத்து படகோட்டி அதனை வேகமாகச் செலுத்தவே, கரையோரக் காவல் படை விரட்டிச் சென்று அந்தப் படகை நகரவிடாமல் தடுத்து நிறுத்தி யது.
இந்தச் செயல்கள் சென்ற திங்கட்கிழமை இரவு 7.40 மணி அளவில் ஒரு நிமிடத்துக்கு நீடித்தது. குடிநுழைவு சட்டப்படி சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக அந்த இரு ஆடவர்களும் கைது செய்யப் பட்டனர். சம்பவத்துக்கு அடுத்த நாள் போலிசார் ஊடகங்களுக்கு அளித்த தகவலில் படகிலிருந்து குதித்து நிலத்தை நோக்கி நீந்திய பங்ளாதே‌ஷி ஆடவரை பொங்கோல் பராட் கரையோரப் பகுதியில் பணியில் இருந்த சிறப்பு கப்பற்படைப் பிரிவு கைது செய்ததாக கூறப்பட்டது. இருவர் மீதும் புதன்கிழமை குடிநுழைவுச் சட்டம் 6(1)(c) பிரிவின் கீழ்  நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று கூறப்பட்டது. இந்தப் பிரிவில் குற்றம் நிரூபணமானால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் குறைந்த பட்சம் 3 பிரம்படிகளும் விதிக்கப்படும். குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்துடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் படகு, $3,734 மலேசிய ரிங்கிட் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 
சட்டவிரோதமாக ஆட்களை சிங்கப்பூருக்குள் கொண்டுசெல் லும் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தாரா என 57(1)(c) என்ற சட்டப் பிரிவின்கீழ் படகோட்டியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இத்தகைய குற்றம் புரிவோருக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்தபட்சம் 3 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon