டெங்கி சம்பவங்கள் மும்மடங்கு அதிகரிப்பு

சிங்கப்பூரில் கடந்த ஆண்டின் முதல் மூன்றரை மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதே காலக்கட்டத்தில் டெங்கி சம்பவங்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்திருக்கிறது என்றும் கொசுக்களின் இனப் பெருக்கம் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது என்றும் அறி விக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் முதல் மூன் றரை மாதங்களில் டெங்கி சம்ப வங்களின் எண்ணிக்கை 678 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டின் முதல் மூன்றரை மாதங் களில் அந்த எண்ணிக்கை 2,457க்கு உயர்ந்துள்ளது என்று சுற்றுப்புற நீர்வள மற்றும் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தெரிவித்தார். 
கொசு இனப்பெருக்கம் அதி கரிக்கும் வெப்பமான மாதங்களுக் குள் சிங்கப்பூர் இப்போது செல்வ தால் டெங்கி பரவலைத் தடுக்க குடியிருப்பாளர்கள் கொசுக்கள் இனப்பெருக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் கோ வலியுறுத்தினார்.
“ஒவ்வொரு டெங்கி சம்பவமும், குறிப்பாக முதியவர்களிடத்திலும் குழந்தைகளிடத்திலும் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது,” என்று நேற்று தனது ஹோங் கா நார்த் தொகுதியில் நடைபெற்ற டெங்கி தொடர்பான கலந்துரையாடல் மற் றும் தடுப்பு நடவடிக்கையில் அவர் கூறினார்.
“கடந்த ஆண்டின் முதல் மூன் றரை மாதங்களில் ஹோங் கா நார்த் தொகுதியில் டெங்கி சம்ப வங்களின் எண்ணிக்கை மூன் றாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதே காலத்தில் அந்த எண்ணிக்கை 17க்கு உயர்ந்துள் ளது,” என்றும் அமைச்சர் சுட்டி னார்.
ஆனால், ஹோங் கா நார்த் தொகுதி கொசு இனப்பெருக்கம் அதிகம் இல்லாத பகுதி என்று இம்மாதம் 15ஆம் தேதி தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணை யப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந் தது.