போனது உரிமம்

சீனாவைச் சேர்ந்த ஓஃபோ நிறுவனம் சிங்கப்பூரில் செயல்படுவதற்கான தனது உரிமத்தை இழந்திருக்கிறது. நிலப்போக்குவரத்து ஆணையம் அந்நிறுவனத்தின் உரிமத்தைத் தற்காலிகமாக ரத்து செய்திருக்கிறது. அந்த உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்யும் தனது எண்ணத்தை ஆணையம் ஓஃபோ நிறுவனத்திற்குக் கடிதம் வழியாக அனுப்பியது.

இது குறித்து பதிலளிக்க ஆணையம் ஓஃபோ நிறுவனத்திற்கு 14 நாள் வரை அவகாசம் தந்திருந்தது.

இதுவரையில் தனது உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதை ஓஃபோ நியாயப்படுத்தத் தவறியுள்ளதாக ஆணையம் இன்று வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டது.