சுடச் சுடச் செய்திகள்

வேலையிடப் பாதுகாப்புத் திட்டத்தில் 60,000 பிரதிநிதிகள் பதிவு

சிங்கப்பூரில் வர்த்தகங்கள் பயங் கரவாத அச்சுறுத்தலைப் பற்றிய அக்கறை கொண்டுள்ளன. வேலையிடங்களைப் பாதுகாப்பாக வைப்பதன் தொடர்பிலான மனித வள அமைச்சின் திட்டத்துக்கு பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 60,000 பிரதிநிதி கள் பதிவு செய்துள்ளனர். 

வேலையிடங்களில் பாதுகாப்பு  (SGSecure @ Workplaces) எனும் திட்டம் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் கண்டபோது மூன்றாண்டுகளுக் குள் 57,000 பேரை அந்தத் திட்டத்தில் பதிவு செய்யத் திட்ட மிடப்பட்டது. தற்போது பதிவு செய்துள்ளவர்களின் எண் ணிக்கை அதைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பிஸ்சேஃப்’ எனும் பாதுகாப் புத் திட்டத்தின் மூன்றாம் படி நிலையை 11,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அடைந்துள்ளதாக சன்டெக் மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய மனிதவள துண அமைச்சர் ஸாக்கி முகமது கூறினார். அந் தப் படிநிலையை எட்டுவதற்கு நிறுவனங்கள் தங்களது அபாய நிர்வாகத் திட்டங்களில் பயங்கர வாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் உள்ளடக்கி இருக்க வேண்டும்.

“பயங்கரவாதம் என்பது உண்மையில் இருக்கக்கூடிய அபாயம். பயங்கரவாதக் குழுக் களுக்கு சிங்கப்பூர் இலக்காக இருக்கிறதா என்பது கேள்வி யல்ல. அது எப்போது என்பதே கேள்வி,” என்று 450 நிறுவனங் களைச் சேர்ந்த சுமார் 600 பேர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் குறிப்பிட்டார். SGSecure @ Workplaces திட்டத் தைச் செயல்படுத்துவதற்கான முயற்சிகளை முடுக்கிவிடவேண் டும் என்றார் அவர்.

சில்லறை விற்பனை, உணவு மற்றும் குடிநீர், பொழுதுபோக்கு, ஹோட்டல், போக்குவரத்து மற் றும் தளவாடங்கள் ஆகிய ஐந்து துறைகளில் பாதுகாப்பை மேம் படுத்துவதற்கு அந்தத் திட்டத் தின்கீழ் முன்னுரிமை அளிக்கப் படுகிறது. 

இந்தத் திட்டத்தில் சேர்ந் துள்ள பிரதிநிதிகள் அமைதியான காலகட்டத்திலேயே, தாங்கள் பாதுகாப்பு தொடர்பாக கற்றுக் கொண்ட தகவல்களை தங்களுடன் பணிபுரிவோருடன் பகிர்ந்துகொள்வதுடன் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைப் பரப்ப வேண்டும். ஆபத்து காலங்களில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான தகவல்களைப் பரப்பும் முக்கிய புள்ளிகளாக அவர்கள் செயல்படுவர்.

முக்கியமான தணிப்பு நட வடிக்கைகளை வலுப்படுத்துவது SGSecure @ Workplaces திட்டத் தின் அடுத்தகட்ட செயல்பாடாக இருக்கும் என திரு ஸாக்கி கூறினார். இந்தத் திட்டத்தில் பதிவு செய்திருக்கும் பிரதிநிதிகள் பாதுகாப்பு வளங்களைப் பயன் படுத்த ஏற்றதாக்குவதையும் இது உள்ளடக்கும்.

“மனிதவள அமைச்சின்  SGSecure @ Workplaces இணை யப்பக்கம் பல்வேறு வளங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் பாதுகாப்பு தொடர்பான எண்ணங்களை உடன் பணிபுரியும் ஊழியர்களுக்கு நினைவூட்டும் விதத்தில் அந்த இணையப்பக்கத்தில் இருக்கும் பதாகைகளைப் பதிவிறக்கி அச்சிட்டு வேலையிடத் தில் ஒட்டிவைக்கலாம்,” என்றும் அவர் கூறினார்.

ஏற்கெனவே இருக்கும் வளங்கள் ஆய்வு, ஆலோசனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் துறைகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்படும் என்றும் இவ் வாண்டின் பிற்பகுதியில் அவை பயன்பாட்டுக்குக் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon