புதிய தொழில்நுட்பத்தில் வேகமும் விவேகமும் தேவை

செயற்கை நுண்ணறிவு, இணையத் தாக்குதல்கள், சீரொருமைப்பாடில்லாத போர் ஆகியவை போட்டித்தன்மைமிக்க சமுதாயங்களுக்குச் சவாலாக இருப்பதாக  மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தெரிவித்திருக்கிறார்.

புதிய தொழில்நுட்பத்தை விரைவாக மேம்படுத்துவதிலும், அதனை நடைமுறையில் பயன்படுத்துவதிலும் முந்திக்கொள்ளும் அதே வேளையில், தொழில்நுட்பத்தை எப்படி ஒழுங்காகவும் விவேகத்துடனும் பயன்படுத்துவது என்பது குறித்த அவதானிப்பு தேவை என்று திரு டியோ தெரிவித்தார். 

இத்தகைய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் ஏற்படும் பின்விளைவுகளைச் சமாளிக்க மக்கள் தயாராக இருக்கிறார்களா என்பது குறித்த ஆராய்ச்சி தேவைப்படுவதாகத் திரு டியோ, இரண்டாவது முறையாக நடந்தேறும் சிங்கப்பூர் தற்காப்புத் தொழில்நுட்ப மாநாட்டில் தெரிவித்தார். ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டில் 23 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 400க்கும் அதிகமான பேராளர்கள் கலந்துகொண்டனர்.