அடகுக்கடை கொள்ளை முயற்சி; தேடப்பட்டு வந்த ஆடவர் கைது

அடகுக்கடையில் கொள்ளையடிக்க முயற்சி செய்து, தன் வெட்டுக்கத்தி இரண்டாக உடைந்ததால் அங்கிருந்து ஓடிய ஆடவர், மறுநாள் போலிசிடம் சிக்கினார்.

பிடோக்கில் உள்ள 'வேல்யூமேக்ஸ்' அடகுக்கடையில் சென்ற வெள்ளிக்கிழமை அன்று கொள்ளையடிக்க முயன்ற அந்த 67 வயது ஆடவர், தன் ஆயுதம் உடைந்த காரணத்தால் அவ்விடத்திலிருந்து ஓடிவிட்டார்.

போலிஸ் கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டும் விசாரணை மூலமும் அதிகாரிகள் சந்தேக நபரை ஈசூனில் அடையாளம் கண்டு கைது செய்தனர். ஆயுதம் தாங்கிய கொள்ளை குற்றம் தொடர்பில் இன்று ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவருக்கு இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நார்த்பாயிண்ட் சிட்டியில் நேற்று நடந்த ‘எஸ்ஜி செக்யூர்’ சாலைக் காட்சியில் துப்பாக்கிக் காரன் தாக்குதல் நடத்தினால் அதை எப்படிச் சமாளிப்பது என்பதை
விளக்க பாவனைக் காட்சி இடம்பெற்றது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Aug 2019

பயங்கரவாதத்தை விளக்கும் பயிற்சியில் பாவனைக் காட்சி