குப்பை வீசுவோரில் புகைபிடிக்கும் இளம் ஆண்களே அதிகம்

உயர்மாடியிலிருந்து குப்பை வீசுவோரில் பெரும்பான்மையினர்  புகைபிடிக்கும் இளம் ஆண்கள் என்று கூறப்பட்டது. தேசிய சுற்றுப்புற அமைப்பு கடந்த ஏழு ஆண்டுகளாகச் செயல்படுத்தி வரும் அதன் கண்காணிப்புக் கேமராக்களில் குற்றங்கள் பதிவாகியுள்ளதில் இத்தகவல் தெரிய வந்துள்ளது. குப்பை வீசும் பத்து பேரில் எழுவர் 21 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.  

சன்னல் வெளியே சிகரெட்டுகள், திசுத்தாட்கள், உணவுக் கழிவுகள் வீசப்படுகின்றன. சென்ற ஆண்டு மட்டும் அமைப்பு 1000க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களைச் செயல்படுத்தி 1,200க்கும் மேற்பட்டோரைப் பிடித்தது. முதல் முறை குற்றம் புரிவோருக்கு $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். அத்துடன் பொது இடங்களில் 12 மணிநேரம் வரை துப்புரவு பணிகள் செய்யும் வேலை ஆணையும் விதிக்கப்படலாம்.