தீபாவளிக்காக கிளி அலங்காரம், 200 கறிவகைகள்

கிளி அலங்காரம் கொண்ட தீபாவளிச் சாலை விளக்குகள், 200 பாரம்பரிய கறி வகைகளைப் பொதுமக்கள் ருசிக்கும் வாய்ப்பை அளிக்கும் ‘கறி ஃபியஸ்டா’, பொதுப் போக்குவரத்துகளில் தீபாவளி கொண்டாட்ட அலங்காரங்கள் ஆகியவற்றுடன் லிட்டில் இந்தியா வரும் செப்டம்பர் மாதம் களைகட்டவுள்ளது.

லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம், இந்த ஆண்டின் தீபாவளி கோலாகல கொண்டாட்டங்களைச் சிறப்பு நிகழ்ச்சிகளோடு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, இந்தியர்களின் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் சிறப்பிக்கக்கூடிய சுமார் 20 நிகழ்ச்சிகளுக்கு லிஷா ஏற்பாடு செய்துள்ளது. இச்சிறப்பு நிகழ்ச்சிகள் 60 நாட்களுக்கு நடத்தப்படும்.

இவ்வாண்டு புதிதாக நான்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்கள் இந்திய மரபுடமை நிலையத்தில் நேற்று நிகழ்ந்த செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டன.
ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ‘தீபாவளி உற்சவ்’ நிகழ்ச்சியில் சுமார் 30 கலைஞர்களின் நடனப் படைப்புகள் இடம்பெறுவது வழக்கம்.

சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, இந்த ஆண்டின் ஊர்வலம் சிங்கப்பூரின் இந்திய முன்னோடிகளின் வாழ்க்கை வரலாற்றையும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றிய பங்கையும் மையப்படுத்தும் வகையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடனமும் நாடகமும் உள்ளடங்கும் இந்நிகழ்ச்சியை ரேஸ் கோர்ஸ் சாலையில் செப்டம்பர் 7ஆம் தேதிமாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை காணலாம்.

தீபாவளி கொண்டாட்ட உணர்வுடன் ஹோலி பண்டிகையை போன்ற கொண்டாட்ட நிகழ்ச்சி, அக்டோபர் 5ஆம் தேதி கிளைவ் ஸ்திரீட்டில் அமைந்துள்ள ‘போலி’ தளத்தில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.
இளையர்களின் வருகையை ஊக்குவிக்க, செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 26ஆம் தேதி வரை தேக்கா லேனுக்கு அருகில் உள்ள திடலில் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை ‘ஹிப்ஸ்டர்’ சந்தை புதிதாக திறக்கப்படும்.
லிட்டில் இந்தியாவில் விற்கப்படும் பாரம்பரிய உணவு வகைகளையும் மற்ற உள்ளூர் பிரபல உணவு வகைகளையும் உள்ளூர் மற்றும் சுற்றுப்பயணிகள் ருசித்து மகிழும் வாய்ப்பை இச்சந்தை தரும்.

பலரும் அறிந்திடாத லிட்டில் இந்தியா பகுதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர பொதுமக்களுக்காக ‘சீக்கிரட் டேல்ஸ் ஆஃப் லிட்டில் இந்தியா’ என்றழைக்கப்படும் வழிகாட்டி பயணம் நவம்பர் 9ஆம் தேதி இந்திய மரபுடைமை நிலையத்தில் மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை இடம்பெறும்.

லிஷா ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களைப் பெற https://www.littleindia.com.sg எனும் இணையப் பக்கத்திற்குச் செல்லவும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!