சரக்குத் தோணிகளில் களவுபோவது ஐந்தாண்டுகளில் இல்லாத அளவு உயர்வு

சிங்கப்பூர் நீரிணைப் பகுதியில் தோணிகளில் இருந்து சரக்குகள் திருடுபோவது ஐந்தாண்டுகளில் இல்லாத அளவிற்குக் கூடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

உலோகக் கழிவுகளே கொள்ளையர்களின் முதல் தெரிவாக இருந்து வருவதாக ‘ரீகேப்’ எனப்படும் ஆசியாவில் கப்பல்களில் ஆயுதந்தாங்கிய வழிப்பறி, கொள்ளையைத் தடுக்கும் வட்டார ஒத்துழைப்பு உடன்பாட்டின் சிறப்பு அறிக்கை கூறுகிறது.

இவ்வாண்டு பிப்ரவரி முதல் இம்மாத நடுப்பகுதி வரை 

14 திருட்டு, வழிப்பறிச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 

2015-2018 வரையிலான நான்காண்டு காலத்தில் இத்தகைய 13 சம்பவங்கள் இடம்பெற்றன. இந்த எண்ணிக்கை 2014ஆம் ஆண்டில் 15ஆக இருந்தது.

Loading...
Load next