சுடச் சுடச் செய்திகள்

தேர்தல் தொகுதி எல்லைகளையும் பிரிவுகளை வரையறுக்கும் குழு கூடியது

சிங்கப்பூரின்  தேர்தல் தொகுதி எல்லைகளை மறுஆய்வு செய்யும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த பொதுத்தேர்தலுக்கு இட்டுச் செல்லும் முதல் படியாக இது அமைகிறது.

தேர்தல் எல்லைகளை மறுஆய்வு செய்யும் குழு கடந்த மாதம் அமைக்கப்பட்டுள்ளதை தேர்தல் துறை  புதன்கிழமை (செப்டம்பர் 4) அறிவித்தது.

தொகுதி எல்லைகளை மறுஆய்வு செய்வதுடன் குழுத்தொகுதி மற்றும் தனித்தொகுதிகளுக்கான எண்ணிக்கைகளையும்  எல்லைகளையும் பரிந்துரைக்க அந்தக்  குழு பணிக்கப்பட்டதாக அது தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மக்கள் தொகையில் ஏற்பட்ட மாற்றம், வீடமைப்பின் மேம்பாட்டில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கருத்தில் கொள்ளப்பட்டதாக அந்த செயற்குழு கூறியது.