ஓய்வுகால நிதி: 28வது இடத்தில் சிங்கப்பூர்

இவ்வாண்டு வலுவான ஓய்வுகால நிதி ஆதாரங்களைப் பெற்றுள்ள ஆசிய நாடுகளின் வரிசையில் சிங்கப்பூர் முதல் மூன்று இடங்களில் இடம்பிடித்து முன்னிலை பெற்றுள்ளது. ஆனால் ஓய்வூதியம் பெறுவோரின் வாழ்க்கைத் தரத்தில் சிங்கப்பூர் பின்தங்கியுள்ளது.

ஓய்வுகால பாதுகாப்பு குறியீட்டு ஆண்டு அறிக்கையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.

ஒட்டுமொத்தமாக 44 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சிங்கப்பூர் தொடர்ந்து 28வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆனால் ஓய்வுகால பாதுகாப்பை வழங்கும் ஆசிய நாடுகளின் வரிசையில் ஜப்பான், தென் கொரியாவுக்கு அடுத்ததாக சிங்கப்பூர் மூன்றாவது நிலையில் உள்ளது.

ஒட்டு மொத்த நாடுகளின் வரிசையில் ஜப்பான் 23வது இடத்திலும் தென்கொரியா 24வது இடத்திலும் உள்ளன. 

ஒரு நாட்டின் நிதி நிலை, சேமிப்பு, முதலீடு, வாங்கும் சக்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஓய்வுகால நிதி மதிப்பிடப்படுகிறது. மகிழ்ச்சி, காற்றின் தரம், தண்ணீர், இயற்கை சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிப்பதில் கணக்கிடப்படுகின்றன. ஆனால் வாழ்க்கைத் தரத்தில் எந்தவொரு ஆசிய நாடும் முதல் 25 இடங்களில் இடம்பெறவில்லை.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூரர்கள் திருமணம் செய்து கொள்ளவும் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்கும் பரந்த தொகுப்பின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. படம்: கோப்புப்படம்

15 Oct 2019

இவ்வாண்டு பிறந்த குழந்தைகளுக்கும் முதல் கடப்பிதழ் இலவசம்

கடந்த டிசம்பர் 10ஆம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் தடங்களில் உள்ள சில எம்ஆர்டி நிலையங்களின் சேவை நேரம் மாற்றப்பட்டது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Oct 2019

‘ரயில் பராமரிப்புக்கு போதுமான முதலீடு செய்யப்படவில்லை’