2,500 சிங்கப்பூரர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சியளிக்க இலக்கு

செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான பயிற்சிகளைச் சிறப்பாக வடிவமைத்து வழங்கும் புதிய முயற்சியில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பும் ஐபிஎம் சிங்கப்பூர் நிறுவனமும் இறங்கி உள்ளன. இந்தப் பயிற்சிகள் சிங்கப்பூரர் களுக்கு மனிதவளம், விநியோகத் தொடர் நிர்வாகம், ஊடகம் போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவுச் செயல்பாடுகளைப் பயன்படுத்த கற்றுக்கொடுக்கும்.

ஐபிஎம் நிறுவனம் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவுச் செயல் பாடுகளை தனது மின்னிலக்கப் பயிற்சிகளில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு சேர்த்துக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப் பட்டது. மின்னிலக்கம் தொடர்பான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் பயிற்சிகளின் 2ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்க நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கல்வி அமைச்சர் ஓங் யி காங் இந்தத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 50,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் மின்னிலக்கம் தொடர்பான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் பயிற்சிகளில் சேர்ந்து பலனனடைந்துள்ளனர். ஆகக் கடைசி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகை யில் ஊழியர்களுக்கு அடிப்படை மின்னிலக்க ஆற்றல்கள் இருக்க வேண்டும் எனும் நோக்கத்தில் இப்பயிற்சிகள் தொடங்கப்பட்டன.

மின்னிலக்கம் தொடர்பான தனது பயிற்சிகள் தொழில்நுட்ப முன்னேற்றங்களைச் சார்ந்திருப் பதை உறுதி செய்யும் வகையில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பும் ஐபிஎம் சிங்கப்பூர் நிறுவனமும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களைக் கொண்டு பாடத் திட்டத்தை மேம்படுத்தியுள்ளன. இதன்மூலம் சிங்கப்பூரர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் அடிப்படைகளைத் தெரிந்துகொள்வர். பின்னர் அவர்கள் தாங்கள் கற்றவற்றை தங்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்த முடியும்.

“செயற்கை நுண்ணறிவு என் பது நமது வேலையிலும் அன்றாட வாழ்க்கையிலும் பொதுவாக பயன் படுத்தும் அம்சமாக உருவாகப் போகிறது. ஆகவே, மின்னிலக்கம் தொடர்பான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் பயிற்சிகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை இணைத்துக் கொள்வது அவசியமாகிறது.

“இந்தத் தொழில்நுட்பத்தை சிங்கப்பூரர்கள் நன்கு அறிந்துகொண்டு அதைப் பயன்படுத்துவர்,” என்று கூறினார் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் தலைமை நிர்வாகி திரு இங் செர் போங்.

இந்தப் பங்காளித்துவத்தின் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் 2,500 சிங்கப்பூரர்களுக்குப் பயிற்சியளிக்க ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பும் ஐபிஎம் சிங்கப்பூர் நிறுவனமும் இலக்கு கொண்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!