வனவிலங்குகள் சாலையைக் கடக்க நூதன முறை

ஓல்ட் அப்பர் தாம்சன் ரோட்டின் ஒரு பக்கத்திலிருந்து குரங்குகள் சில ஒன்றன் பின் ஒன்றாக மறுபக்கத்திற்குக் கடந்து சென்றுகொண்டிருந்ததை கேமரா ஒன்று கண்காணித்து வந்தது. அந்த விலங்குகள் செல்லும் அசைவை கேமரா உணர்ந்தபோது ‘விலங்குகள் முன்னே’ என்ற எச்சரிக்கை வாசகத்திற்குக் கீழ் உள்ள விளக்குகள் மின்னத் தொடங்கியது.

மின்னுகிற அந்த அறிவிப்புப் பதாகையைக் கார் ஒன்று நெருங்கிக் கொண்டிருந்தபோது அதன் சிவப்பு நிற பிரேக் ஒளி மின்னத் தொடங்கியது. அப்போது அந்தக் கார் தனது வேகத்தைக் குறைத்து அந்தக் குரங்குகள் பாதுகாப்பாகக் கடந்து செல்வதற்கான நேரத்தைத் தந்தது. உணவு அல்லது துணை தேடுவதற்காக ஓர் இடத்தைவிட்டு மற்றோர் இடத்திற்குச் செல்லும் சிங்கப்பூரின் பூர்வீக வனவிலங்குகளைப் பாதுகாக்க அதிகாரிகள் முதன்முறையாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.

தாம்சன் இயற்கைப் பூங்காவின் திறப்புவிழாவின்போது, நூதனமான இந்த வனவிலங்கு கண்டுபிடிப்பு முறையை தேசிய பூங்காக் கழகம் வெள்ளிக்கிழமை ( அக்டோபர் 11ஆம் தேதி) வெளியிட்டது. 50 ஹெக்டர் பரப்பளவு கொண்ட பசுமை இடமாகத் திகழ்கிறது அந்த இயற்கைப் பூங்கா, சிங்கப்பூரின் ஏழாவது இயற்கைப் பூங்காவாக உள்ளது.

பூங்காக் கழகமும் நிலப்போக்குவரத்து ஆணையமும் இந்தக் கட்டமைப்புக்காக 400,000 வெள்ளி செலவு செய்தது. சாலைகளை மனிதர்கள் அல்லது விலங்குகள் கடந்து செல்கிறதா என்பதை அறியும் ‘அல்கோரிதம்’ எனப்படும் படிமுறைத் தீர்வை இந்தத் தொழில்நுட்பக் கட்டமைப்பு கொண்டுள்ளது.

ஓல்ட் அப்பர் தாம்சன் சாலை நெடுக விலங்குகள் வாகனங்களால் இடிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ள ஓராண்டு சோதனைத் திட்டத்தில் இந்தக் கட்டமைப்பு அங்கம் வகிக்கிறது. மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கைக் காப்பகத்திற்கும் புதிய தாம்சன் இயற்கைப் பூங்காவுக்கும் இடையில் உள்ள இந்தச் சாலையின் நீளம் மூன்று கிலோமீட்டர். இங்கே விலங்குகள் அடிக்கடி கடந்துபோவதை இயற்கை பன்முகத்தன்மைக்கான ஆய்வுகளும் விலங்குகளின் பாதச் சுவடுகள், சாணம், மரத்தின் மீதான கீறல்கள் உள்ளிட்ட இயற்கையாகவே காணப்படும் சில தடயங்களும் காட்டுகின்றன. இவ்வாறு செல்லும் விலங்குகளில் ‘பேண்டட் லங்கூர்’ குரங்குகள், சுங்டா பெங்கோலின் ஆகியவை அடங்கும்.

நிலவியல் எல்லைகள் விலங்குகளின் புலனறிவைத் தாண்டியது என்று கூறிய என்பார்க்ஸின் பேணுதல் பிரிவுக்கான இயக்குநர் ஷேரன் சான், இரை அல்லது துணை தேடுவதற்காக அவ்விலங்குகள் அடிக்கடி காப்பகங்களைவிட்டு மற்ற காட்டுப் பகுதிகளுக்குச் செல்ல முற்படும் என்றார். அவ்வாறே, வனக்காப்பகங்களில் இருக்கவேண்டிய மலாயன் முள்ளம்பன்றி, சுண்டா பெங்கோலின், ‘லெஸர் மவுஸ்’ மான், ‘ஸ்ட்ரா ஹெடட் புல்புல்’ பறவை உள்ளிட்ட விலங்குகள் புதிய பூங்காவுக்குள்ளும் காணப்பட்டுள்ளன. சிங்கப்பூரிலும் மலேசிய தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் மட்டும் காணப்படும் ராஃபிள்ஸ் பேண்டட் லங்கூர் இனக் குரங்கு கூட இந்தப் பூங்காவில் காணப்பட்டுள்ளது.

Remote video URL

இயற்கை காப்பகத்திற்கும் இயற்கை பூங்காவிற்கும் இடையே விலங்குகள் பாதுகாப்புடன் செல்லக் கைகொடுக்கும் சில நடவடிக்கைகளை அதிகாரிகள் செயல்படுத்தியுள்ளனர். விலங்குக் கண்காணிப்பு அமைப்பு மட்டுமின்றி ஐந்து சுரங்கத் துளைகளும் கயிறுகளால் செய்யப்பட்ட இரண்டு மேம்பாலங்களும் ஓல்ட் அப்பர் தாம்சன் ரோட்டில் கட்டப்பட்டுள்ளன.

தேசிய பூங்காக் கழகம், நிலப்போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இரண்டு வழிச்சாலையை ஒருவழிச்சாலையாக மாற்றத் தொடங்கியது. அத்துடன் இந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்தை நாள்தோறும் இரவு 7.30 மணி முதல் காலை 6 மணி வரை நிறுத்துவதற்கான திட்டங்கள் இருப்பதாக என்பார்க்ஸ் தெரிவித்தது.

உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும்போது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க நிலப்போக்குவரத்து ஆணையம் என்பார்க்ஸுடன் எப்போதும் அணுக்கமாகச் செயல்பட்டு வருவதாக நிலப்போக்குவரத்து ஆணையத்தின் தலைமை நிர்வாகி இங்கியென் ஹூன் பின் தெரிவித்திருக்கிறார்.

“சாலையில் விலங்குகள் செல்வதை உணரும் கட்டமைப்பு போன்ற கூட்டு முயற்சிகள், எங்கள் இலக்குகளை அடைவதற்காக தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதை எங்களுக்கு உணர்த்த உதவுகின்றன,” என்று திரு ஹூன் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!