உயிர்காத்த 41 பேருக்கு அங்கீகாரம்

மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சை (சிபிஆர்) மேற்கொண்டு அவர்களது உயிரைக் காத்த 41 பேர் நேற்று எக்ஸ்போவில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்டனர். ‘யுபிஇசி’ எனப்படும் மருத்துவமனைக்கு முந்தைய அவசரகாலப் பராமரிப்பு அமைப்பு, சான்றிதழையும் பாராட்டுப் பத்திரத்தையும் அவர்களுக்கு வழங்கியது. தீயணைப்பு வீரர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் போன்றோருடன் பொதுமக்களில் சிலரும் இதில் அங்கீகாரம் பெற்றனர். சிங்கப்பூர் இதய அறநிறுவனத்தின் ஆதரவுடன் ‘யுபிஇசி’ எட்டாவது ஆண்டாக நிகழ்ச்சியை நடத்தியது. சிபிஆர், ஏஇடி எனப்படும் தானியங்கி வெளிப்புற அதிர்வுப்பெட்டியை இயக்குவது ஆகியவற்றைத் தெரிந்துவைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

Loading...
Load next