ஜிஎஸ்டி மோசடி, வரி ஏய்பு: வரிகள், அபராதமாக $175 மில்லியன் மீட்பு

சிங்கப்பூரின் வருவாய்த் துறை அதிகாரிகள் செப்டம்பர் வரையிலான இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஜிஎஸ்டி தொடர்பான சுமார் 2,000 சம்பவங்கள் மீது புலன்விசாரணை நடத்தி வரிகளாகவும் அபராதமாகவும் $175 மில்லியன் வசூலித்துள்ளனர்.

சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரம் வெளியாகி உள்ளது.

சட்டத்தை மீறுபவர்களையும் வரி ஏய்ப்பு செய்வோரையும் அடையாளம் காண தரவு பகுப்பாய்வு முறையை ஆணையம் பயன்படுத்தி வருகிறது. அதன் மூலம் நிறுவனங்களையும் தனிப்பட்டவர்களையும் தணிக்கைக்கு உட்படுத்தியதாக அறிக்கை குறிப்பிட்டது.

ஜிஎஸ்டி மோசடி, விதிமீறல் ஆகியன தொடர்பில் 53 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் 20 சம்பவங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

“இந்த 20 வழக்குகளில் 14க்கு தீர்ப்பு வழங்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டனர். எஞ்சிய ஆறு வழக்குகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது,” என்றது ஆணையம்.

ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான 2018 நிதி ஆண்டில் ஜிஎஸ்டி தொடர்பான 3,145 சம்பவங்களின் மீது தணிக்கை நடத்தப்பட்டு அபராதமாகவும் வரிகளாகவும் $195.8 மில்லியன் மீட்கப்பட்டதாகவும் அது தனது நேற்றைய அறிக்கையில் குறிப்பிட்டது.

அதற்கு முந்திய 2017 நிதி ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 2,858 ஆகவும் வசூலிக்கப்பட்ட தொகை $219.5 மில்லியனாகவும் இருந்தன. அதேபோல 2016 நிதி ஆண்டில் 3,113 சம்பவங்களும் $168.8 மில்லியன் தொகையும் சம்பந்தப்பட்டன.

“பொதுவாக, விதிமீறும் போக்கு வர்த்தகங்களிலேயே அதிகம் காணப்படுகிறது. நிர்வாகத்தினுள் பலவீனமான கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகள், ஆவணங்களைப் பாதுகாப்பது இல்லாமை அல்லது குறைவான ஆவணப் பாதுகாப்பு போன்றவை இவற்றுக்கு இட்டுச்செல்கின்றன.

“இதுபோன்ற பழங்கங்கள் சொந்தமாக செய்யும் தொழில் மற்றும் குடும்பங்கள் நடத்தும் வர்த்தகம் ஆகியவற்றில் பொதுவாகக் காணப்படுகின்றன. குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு வர்த்தகப் பொறுப்புகளை வகிக்கிறார்கள். இவற்றில் சில முந்திய சந்ததியினர் விட்டுச்சென்றவை. அவை பெரும்பாலும் கணக்கு எழுதுவதிலம் ஆவணங்களைப் பாதுகாப்பதிலும் பழைய முறைகளையே பின்பற்றுகின்றன,” என்றது ஆணையம். அதற்கு உதாரணமாக ஈமச் சடங்கு சேவை நடத்தும் துறையை ஆணையம் சுட்டியது.

மூன்று ஈமச் சடங்கு நிறுவனங்களில் கடந்த மாதம் ஒரே நேரத்தில் ஆணைய அதிகாரிகள் சோதனை நடத்தினர். செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற அந்த நடவடிக்கையின்போது சிங்கப்பூரின் 10 இடங்களில் அதிகாரிகள் புலன்விசாரணை நடத்தினர். தொடர்ந்து கணினிகள், கைபேசிகள், சிம் அட்டைகள், வர்த்தக ஆவணங்கள் ஆகியன அவற்றில் இருந்து கைப்பற்றப்பட்டன.

வரி ஏய்ப்பு, ஜிஎஸ்டி பதிவு செய்யத் தவறுதல் போன்றவற்றில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் சிக்கியுள்ளவர்களில் 16 பேர் புலன் விசாரணையில் உதவி வருகின்றனர்.

இந்த விவரங்களை ஆணையம் தனது அறிக்கையில் விளக்கி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!