புக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் நிகழ்ந்த மூன்று வாகன விபத்தை அடுத்து 20 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அப்போது அந்த விரைவுச்சாலையில் சென்றுகொண்டிருந்த சியாஹிர், சம்பவ இடத்தைக் காணொளி எடுத்து ஸ்டாம்ப் செய்தித்தளத்திற்கு அனுப்பினார்.

தனியார் பேருந்தின் பின்பக்கமாக மோட்டார் சைக்கிள் இடித்ததை அந்தக் காணொளி காட்டுகிறது. விபத்துக்குள்ளான தனியார் பேருந்தைச் சுற்றிலும் வாகனச் சிதைவுகள் சிதறிக் கிடந்தன.

அக்டோபர் 13ஆம் தேதி  லாரி, தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து போலிசாருக்குப் பிற்பகல் 1.38 மணிக்குத் தகவல் கிடைத்தது. எட்டு வயதுக்கும் 68 வயதுக்கும் இடைப்பட்ட 20 பேர் சுயநினைவுடன் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை, இங் டெங் ஃபோங் மருத்துவமனை, டான் டோக் சேங் மருத்துவமனை ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டனர்.

போலிசாரின் விசாரணை தொடர்கிறது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!