நான்கு நாள் பயணம் மேற்கொண்டு மெக்சிகோ செல்கிறார் பிரதமர் லீ

மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மேனுவல் லோபெஸ் ஓப்ர டோரின் அழைப்பை ஏற்று மெக்சிகோவுக்கு இன்று முதல் 20ஆம் தேதி வரை நான்கு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் லீ சியன் லூங்.

அந்தப் பயணத்தின்போது திரு லீக்கு மெக்சிகோ அதிபர் லோபெஸ் ஓப்ரடோர் பகல் விருந்தளிப்பார். பிரதமர் லீ மெக்சிகோ செனட் சபையில் உரையாற்றுவார். பின்னர் செனட் சபையின் தலைவர் ரிகார்டோ மோன்ரியல் அவிலா வைச் சந்திக்கும் பிரதமர் லீக்கு மெக்சிகோ சிட்டி மேயர் டாக்டர் குளோடியா ஷென்பவும் பார்டோ மெக்சிகோ சிட்டின் மதிப்புமிக்க வருகையாளர் பதக்கம் வழங்கி சிறப்பிப்பார்.

அத்துடன் மெக்சிகோவின் வர்த்தகத் தலைவர்களைச் சந்திக்கும் திரு லீ, மெக்சிகோ வர்த்தக சமூகத்தினருடன் கலந்துரையாடலிலும் கலந்துகொள்வார். 

அறிவியல், தொழில்நுட்பம், சீர்வளம், கலாசாரம், தொழி லியல் சொத்து, அனைத்துலக மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய புரிந்துணர்வுக் குறிப்பில் சிங்கப்பூரும் மெக்சி கோவும் கையெழுத்திடும். 

பிரதமர் லீயுடன், திருமதி லீ, தற்காப்பு, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான், வர்த்தக தொழில், கல்வி மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட், பிரதமர் அலுவலகம், வெளி யுறவு அமைச்சு, வர்த்தக தொழில் அமைச்சு, என்டர்பிரைஸ் சிங்கப்பூர் ஆகியவற்றின் அதிகாரிகளும் வர்த்தக பேராளர்க களும் செல்கின்றனர். 

பிரதமர் நாடு திரும்பும் வரை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தற்காலிகப் பிரதமராகச் செயல்படுவார்.