சுடச் சுடச் செய்திகள்

வேலையிடங்களில் பாதுகாப்புக்கு முன்னுரிமை

முறையான வரிசை பிடித்து நிற்கும் வோ ஹப் எனும் கட்டுமான மற்றும் குடிமைப் பொறியியல் நிறுவனத்தின் ஊழியர்கள் வழக்கமான காலைநேர உடற்பயிற்சிகளுக்குப் பிறகு ஒன்றுகூடியுள்ளனர்.

பின்னர் மஞ்சள் நிறத் தலைக்கவசமும் கொசுக்கள் ஊடுருவமுடி யாத வெளிர் நிற மேலாடை அணிந்துள்ள சுமார் 1,000 ஊழி யர்கள் அனைவருக்கும் அன்றாட வேலையிடப் பாதுகாப்பு தொடர் பான விளக்கங்கள் அளிக்கப்படு கின்றன.

இந்த அன்றாட நடவடிக்கையை நேரில் பார்வையிட வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார மன்ற அதிகாரிகள் நேற்று ஹவ்காங் அவென்யூ 3ல் உள்ள கிம் சுவான்  பணிமனை விரிவாக்கத் திட்டத் தின் கட்டுமானத் தளத்துக்குச் சென்றனர். 

வோ ஹப் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளில் இவ்வாண் டில் இதுவரை வேலையிட மரணங் கள் நிகழவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.

தங்கள் அன்றாடப் பணிக ளுக்கு இடையே சிறிது நேரத்தை ஒதுக்கி, அதில் தங்கள் ஊழியர் களுக்கு வேலையிடப் பாதுகாப்பு தொடர்பில் விளக்க உரைகள் வழங்க நிறுவனங்களுக்கு மனித வள அமைச்சு மற்றும் இதர அர சாங்க அமைப்புகளுடன் அணுக்க மாகப் பணியாற்றும் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் ஆலோ சனை வழங்கியுள்ளது.

சில ஆபத்தில்லாத வேலைகளைத் தவிர பாரந்தூக்கிகள், மண் தோண்டுதல் போன்ற கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தும்  எல்லா வேலைகளும் நேற்றைய பாதுகாப்பு விளக்க உரைக்காக நிறுத்தப்பட்டன.

கடந்த மாதத்தில் மட்டும் ஒன்பது வேலையிட விபத்துகள் நிகழ்ந் ததை அடுத்து வேலையிடப் பாது காப்பில் முழுக் கவனம் செலுத்தப் பட வேண்டும் என்று அனைத்து தரப்புகளிலிருந்தும் கோரிக்கை வலுத்துள்ளது. கட்டுமானத் துறை யில் நிகழ்ந்த நான்கு மரணங்களில் இரண்டு, பளுதூக்கும் வேலை யின்போது நிகழ்ந்தன என்றும் கூறப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon