ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்

சிங்கப்பூரின் இரு நூற்றாண்டு நிறைவைப் போற்றிவரும் தருணத்தில் தமிழர்களுக்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையிலான நூற்றாண்டு உறவை விளக்கும் அரிய நூல் ஒன்று வெளியீடு கண்டுள்ளது. தமிழ் மக்கள் சிங்கப்பூரில் கால் பதித்தது முதல் குடியேற்றம் கண்டு இங்கேயே வேரூன்றியது வரையிலான வரலாற்றை விவரிக்கிறது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு உள்ள நூல்.

ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை வெளியிட்ட தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தக்க தருணத்தில் நூல் வெளிவந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான பொருளியல் தொடர்புகளுடன் பண்பாட்டுத் தொடர்புகளையும் நாம் ஆழப்படுத்த வேண்டும். இதுபோன்ற ஆய்வுகள் நமது வேரை அறிந்துகொண்டு, நம் சமூகம் வலுப்பெற உதவுகின்றன என்றார் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு ஈஸ்வரன்.

கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய காலனித்துவ தலைவர்கள் இங்கு வருவதற்கு முன்பாகவே சிங்கப்பூரில் குடியேறிய தமிழர்களைப் பற்றியும் தென்கிழக்காசியாவில் புலம்

பெயர்ந்த தமிழர்களைப் பற்றியும் படிப்பது பொருத்தமாக உள்ளது என்றார் அவர்.

நூலின் சிறப்புகளை விளக்கிய இந்நூலின் ஆசிரியரும் கொள்கை ஆய்வுக்கழகத்தின் சிறப்பு ஆய்வு ஆலோசகருமான திரு அருண் மகிழ்நன், “தென்கிழக்காசியாவில் இந்தியர்கள் பற்றிய நூல்கள் வெளிவந்துள்ளன. எனினும், தென்கிழக்காசியாவில் தமிழர் வரலாறு, வாழ்வு பற்றி ஆய்வு அடிப்படையில் உலகெங்கும் வாழும் துறைசார்ந்த நிபுணர்களாலும் சிங்கப்பூர் கல்வியாளர்கள் மற்றும் துறைசார்ந்தவர்

களாலும் எழுதப்பட்டுள்ள முதல் தொகுப்பு நூல் இது எனலாம். இது ஒரு தொடக்கம்.

“இதனை முதல்படியாகக் கொண்டு, இவ்வட்டாரத்திலும் சிங்கப்பூரிலும் தமிழர்களின் ஆதிகாலத் தொடக்கம், வாழ்வியல், பங்களிப்புகள் உள்ளிட்ட சிறப்புகள் குறித்து இன்னும் ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்றார்.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு கால முயற்சியில் வெளிவந்திருக்கும் இந்த நூல், சிங்கப்பூருக்கும் தென்கிழக்காசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயுள்ள தொடர்புகளின் பல அம்சங்களைத் தொட்டுப் பேசுகிறது. பல நூற்றாண்டுகாலத் தொடர்பும் பங்களிப்பும் ஆய்வுபூர்வமாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்நூலில் இடம்பெற்றுள்ள பல கட்டுரைகள் பல்வேறு அம்சங்களை முதல்முறையாகப் பேசுகின்றன. இந்த வட்டாரத்தில் தமிழர்களின் தொன்மையை வரலாற்று ரீதியாக நிறுவ முற்படுகிறது இந்நூல் என்றார் நூலின் இணை ஆசிரியரும் வரலாற்றியலாளருமான குமாரி நளினா கோபால்.

இந்திய மரபுடைமை நிலையமும் கொள்கை ஆய்வுக் கழகமும் இணைந்து வெளியிட்டுள்ள நூல் 29 எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் உருவானது. முதல் பாகம் தென்கிழக்காசியாவில் வேரூன்றிய பழந்தமிழர் பற்றியும் இரண்டாம் பாகம் சிங்கப்பூரில் குடியேறிய தமிழர் பற்றியும் பேசுகின்றன. நூலில் மொத்தம் 27 அத்தியாயங்கள் உள்ளன.

இந்தியா, தென்கிழக்காசியா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளின் பிரபல ஆய்வாளர்கள், வரலாற்று நிபுணர்களின் ஆய்வு களும் தொல்பொருள் ஆய்வாளர்களின் அரிய கண்டுபிடிப்புகளும் நூலில் ஒருசேரத் தொகுக்கப்பட்டுள்ளன.

நூல் வெளியீட்டில் கலந்துகொண்டதன் மூலம் தமிழர் பெருமையைத் தெரிந்துகொண்டதாக கூறினார் தியானா இளஞ்செழியன். “நூலின் அத்தியாயங்கள் அனைத்துமே தமிழர்களின் வரலாற்றை வர்ணித்துள்ளன. இதன் மூலம் எனது தமிழ்ச் சமூகம் கடல் கடந்து ஆற்றிய பங்களிப்புகள் பற்றிய ஆழமான தகவல்களை அறிந்துகொண்டேன்,” என்றார் தியானா, 22.

தென்கிழக்காசியா

Article Hard Regwall
 
Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
அண்மைய காணொளிகள்

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!