பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கியவருக்குச் சிறை

பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கிய குற்றத்துக்காக சிங்கப்பூரரான 36 வயது இம்ரான் காசிமுக்கு (படம்) 33 மாதச் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கியது தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட முதல் சிங்கப்பூரர் ஆவார்.

பயங்கரவாத அமைப்புக்கு உதவி செய்யும் நோக்கில் பணம் அனுப்பியதாக முன்னாள் தளவாட நிபுணரான இம்ரான் நேற்று முன்தினம் ஒப்புக்கொண்டார். ஐஎஸ் கொள்கை பரப்பு அறிக்கைகளை அச்சிட வெஸ்டர்ன் யூனியன் மூலம் துருக்கியில் உள்ள முகம்மது அல்சையத் அல்மிதான் என்ற நபருக்கு இம்ரான் $450 அனுப்பினார்.

முகம்மது அல்சையத் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்று அமெரிக்க அரசாங்கத்துக்குச் சொந்தமான இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இம்ரானின் ஒப்புதல் வாக்கு

மூலம், பணம் அனுப்பியதற்கு ஆதாரமாக இருக்கும் படிவம், ரசீது ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு அவர் குற்றவாளி என நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

இம்ரானின் 33 மாதச் சிறைத் தண்டனை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியிலிருந்து தொடங்குவதாக எடுத்துக்கொள்ளப்படும். தாம் சிங்கப்பூரின் சட்டத்திட்டங்களுக்குக் கட்டுப்பட்டவன் அல்ல என்றும் இஸ்லாமிய சட்டத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவன் என்று இம்ரான் நேற்று முன்தினம் கூறியதை நீதிபதி வன்மையாகக் கண்டித்தார்.

ஐஎஸ் அமைப்புக்கு தாம் பணம் அனுப்புவது யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக இம்ரான் அதற்கான நடவடிக்கைகளை எடுத்ததாக அரசு வழக்கறிஞர்கள் கூறினர்.

பணம் அனுப்புவது தொடர்பான விவரங்களை முகம்மது அல்சையத்திடம் கேட்டு அறிந்துகொள்ள Surespot எனும் செயலியை இம்ரான் பயன்படுத்தினார். பணத்தை அனுப்பியதுடன் அந்தச் செயலியைத் தமது கைபேசியிலிருந்து நீக்கினார். ஆதாரங்களை விட்டுச் செல்லக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்ததை அரசு வழக்கறிஞர்கள் சுட்டினர்.

2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட நோக்கம் கொண்டிருந்த இம்ரானுக்கு எதிராகத் தடுப்பாணை பிறப்பிக்கப்பட்டது.

இம்ரான் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட முதல் சிங்கப்பூரர் என்றபோதிலும் இக்குற்றம் தொடர்பில் சிங்கப்பூரில் தண்டிக்கப்படும் இரண்டாவது நபராவார்.

பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கியது தொடர்பாகக் கடந்த அக்டோபர் மாதத்தில் முன்னாள் தகவல் தொழில்நுட்ப நிபுணர் அகமது உசேன் அப்துல் காதர் ஷேக் உதுமானுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவருக்கு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஐஎஸ் பற்றி இம்ரான் கொண்டிருக்கும் கருத்துகளை அவரது குடும்பத்தினர் அனைவரும் ஏற்கவில்லை என்று இம்ரானின் சகோதரர் தெரிவித்தார்.

இஸ்லாம் மீது ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு களங்கம் விளைவித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!